தனித்தீவு ஒன்றில் படகில் மயங்கிய நிலையில் கரையொதுங்கிய யாழ். நபர்!

Report Print Murali Murali in சமூகம்

வேதாரணியம் பகுதியில் உள்ள தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட படகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ். வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் வல்வெட்டித்துறையை சேர்ந்த பார்த்தசாரதி என அழைக்கப்படும், பார்த்திபன் (வயது 40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மது போதையில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த படகில் வந்த மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாக தமிழக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று அதிகாலை வேதாரணியம், மணியன் தீவில் இந்த படகு ஒன்று கரையொதுங்கியதாகவும், படகில் வந்தவர்கள் கஞ்சா கடத்தும் நோக்கில் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


you may like this video

Latest Offers