கொழும்பு வாழ் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள புதிய சேவை!

Report Print Vethu Vethu in சமூகம்

கோட்டையில் இருந்து யூனியன் பிளேஸ் வரை படகு சேவை ஆரம்பிப்பதற்கு காணி அபிவிருத்தி சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வீதி போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் படகுகள் முதல் கண்காணிப்பு பயணத்தை ஆரம்பித்தது.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டமை தொடர்ந்து கோட்டையில் இருந்து யூனியன் பிளேஸ் வரை 15 நிமிடம் என்ற குறைந்த அளவில் பயணிக்க முடிந்துள்ளது.

இது போக்குவரத்து நெருக்கடிக்கு சிறந்த தீர்வாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers