இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் விலை அதிகரிப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் இன்றைய தினம் நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை நேற்றைய தினம் முதல் 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த போதும் விலை அதிகரிப்பிற்கான காரணம் என்னவென தெரிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து பாண், பனிஸ் உட்பட கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers