பாதுகாப்பு பிரிவுகளில் தமிழ் பெண்களுக்கு இடமில்லை! இளம் பெண் மீது கொடூர தாக்குதல்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இளம் யுவதி மீது மர்மநபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு பிரிவுகளில் தமிழ் யுவதிகள் பணியாற்றக் கூடாது என்று வலியுறுத்தி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய இளம் யுவதி மீதே கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தடுக்க சென்றவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டமையினால் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால் காயம் அடைந்த அனைவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த யுவதி தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தான் பாதுகாப்பு பிரிவில் சேவை செய்ய கூடாதென்றே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Latest Offers