இலங்கையில் மற்றுமொரு துறையில் கால் பதிக்கும் சீனா

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையில் எரிபொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் சினோபெக் எனப்படும் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்ளும் வகையில், இந்த எண்ணெய் நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சினோபெக் தெரிவித்துள்ளது.

இலங்கையில் Fuel Oil Sri Lanka Co Ltd என்ற பெயரில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இந்த நிறுவனம் செயற்படவுள்ளது.

இந்த நிறுவனத்தினால் கப்பல்கள் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers