தொழிற்சங்க தலைவரை விடுவிக்க கோரி பணிப்புறக்கணிப்பில் தொழிலாளர்

Report Print Sumi in சமூகம்

யாழ். மாநகரசபை வடபிராந்திய தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி, யாழ். மாநகரசபையின் சுகாதார தொழிலாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாது, குப்பைகள் தேங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 15ஆம் திகதி யாழ். மாநகரசபையின் மேற்பார்வையாளர் ஒருவருக்கும், தொழிற்சங்க தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கைகலப்பாக மாறியதில், குறித்த தொழிற்சங்க தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தொழிற்சங்க தலைவருக்கு, மாநகரசபை ஆணையாளரினால் பணி நீக்க கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தியும், மாநகரசபை ஆணையாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பணி நீக்க கடிதத்தினை மாநகரரசபை ஆணையாளர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரியும் யாழ். மாநகரசபையின் சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Offers