வெளிநாடு சென்ற என் அம்மாவுக்கு என்ன நடந்தது? இலங்கையில் தவிக்கும் மகள்

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் முகவர் நிலையம் ஊடாக குறித்த பெண்மணி , டுபாய் சென்றுள்ளார்.

இந்நிலையில் தமது தாய் தொடர்பான எந்தவித தகவல்களும் தற்போது கிடைக்கவில்லை என அவரின் மூன்று பிள்ளைகளும் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான பிசோமெனிக்கா என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

டுபாய் சென்ற நிலையில் ஆறு மாத காலங்களாக அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. குறித்த முகவர் நிலையம் ஊடாக நிவாரணம் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த ஆறு மாதங்களாக தனது அம்மா தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என காணாமல் போன பெண்ணின் மகள் தெரிவித்துள்ளார்.

அங்கு பணியாற்றும் பிலிபைன்ஸ் பெண்ணின் கையடக்க தொலைபேசியின் மூலம் அம்மா என்னை தொடர்பு கொண்டார். வேலை செய்யும் வீட்டில் தன்னை துன்புறுத்துவதாகவும், அங்குள்ளவர்கள் கடுமையாக தாக்கியதாகவும் கூறினார். இதன்காரணமாக முதுகு வலி ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

அம்மா தொடர்பான தகவல்களை பெற முகவர் நிலையத்தின் உதவியை நாடினோம். அதற்காக அவர்கள் 4 இலட்சம் ரூபா பணம் கேட்கின்றனர். அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை என மகள் தெரிவித்துள்ளார்.

Latest Offers