கன்னியாவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட சுடு தேனீர்த்தாக்குதலை கண்டித்து வவுனியாவில் போராட்டம்

Report Print Theesan in சமூகம்

கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடுதேனீர் ஊற்றப்பட்டமை உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை கொடுத்த பின்னர், சிவனேசன், சிறிதரன், யோகேஸ்வரன் ஆகியோர் ஏன் கன்னியாவுக்கு சென்றார்கள்?, அவர்கள் எம்.பி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இதன்போது கோசம் எழுப்பினர்.

மேலும், தமிழர் தாயகத்தில் விகாரை கட்டுவதை ரணில் நிறுத்த வேண்டும், சிங்கள புத்த மத பயங்கரவாதத்தினை நிறுத்த தமிழர்களுக்கு அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி தேவை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

879 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கொட்டகைக்கு முன்பாகவே இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Latest Offers