மோதல்களை செய்தியாக வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு பிணை

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை செய்தியாக வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த விடயம் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது முறைப்பாட்டாளராக உள்ள கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்வாகம் சார்பாக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்த நிலையில், வைத்தியசாலை சூழலில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸாரினால் சமர்பிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த சட்டத்தரணிகள் தமது தரப்பு நியாயங்களை நீதிவானுக்கு தெளிவுப்படுத்தியுள்ளனர்.

குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிவான் வழக்கு முடிவுறும் வரை சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்கள் வைத்தியசாலை குறித்து எதுவித செய்திகளையும் எழுத கூடாது என்றும், வைத்தியசாலை நிர்வாகத்தை அச்சுறுத்தும் வகையில் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஊடகவியலாளர்கள் சார்பாக சட்டத்தரணிகளான எம் ஏ .எம் மூபீத், எம்.எம் ரதீப் அஹமட், எம்.எப் அனோஜ், கே.எம் றிப்ஹான், மதிவதனன், சிரேஸ்ட சட்டத்தரணி அமீரூல் அன்சார் மௌலானாவும் ஆஜராகியுள்ளனர்.

மேலும் இவ்வழக்கு எதிர்வரும் செப்ரம்பர் 18 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers