மனித உரிமைகள் ஆணையாளர் மீனவ சங்க உறுப்பினர்களுடன் சந்திப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்க உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு இரணைப்பாலை பொதுநோக்கு மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு - இரணைப்பாலை, புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு , அம்பலவன் பொக்கணை உள்ளிட்ட மீனவ சங்க உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சமகாலத்தில் மீன்பிடித் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் குழுவிற்கு மீனவ சங்க அங்கத்தவர்கள் எடுத்துக்கூறியுள்ளனர்.

இதன் அடிப்படையில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சிணைகளுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிக சற்குணநாதன் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers