போதையால் வந்த வினை! நீதிபதி கொடுத்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் அயல் வீட்டவர்களை தாக்கி காயப்படுத்திய ஒருவரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.

இதன்படி, சந்தேகநபரை இம்மாதம் மாதம் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குச்சவெளி பகுதியைச் சேர்ந்த ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அயல் வீட்டு நபர்கள் இருவரை பழைய குரோதத்தின் காரணமாக மது போதையில் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Latest Offers