இலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது!

Report Print Vethu Vethu in சமூகம்

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக விக்டோரிய நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் முழுமையாக குறைவடைந்துள்ளது.

இதனால் பல வருடங்களுக்கு முன் மறைந்த தெல்தெனிய நகரம் மீண்டும் தோன்ற ஆரம்பித்துள்ளது.

அந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வற்றியமையினால் பிரித்தானிய ஆட்சி காலத்தில் முதன் முறையாக இரும்பு பாலம் தோன்ற ஆரம்பித்துள்ளது.

அத்துடன் வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பல சிலைகளும் தென்பட ஆரம்பித்துள்ளன.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 120 மீற்றராகும். அதன் நீளம் 52 மீற்றராகும். எனினும் தற்போது நீர் மட்டம் முழுமையாக வற்றிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.