கொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் சட்டவிரோதமான முறையில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக விபச்சார தொழிலில் ஈடுபட்ட சீன மற்றும் ரஷ்ய நாட்டவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, பம்பலப்பிட்டியில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய செயற்பட்ட அதிகாரிகள், நபர் ஒருவரை சேவை பெற்றுக்கொள்வதற்காக அனுப்பி நூதன முறையில் குறித்த பெண்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 40 வயதுடைய ரஷ்ய நாட்டு பெண் ஒருவரும், சீன நாட்டு பெண்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சட்டத்திட்டங்களுக்கமைய இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் எந்தவொரு தொழிலில் ஈடுபடுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.