கல்கிசையில் பெண் ஒருவர் கைது

Report Print Jeslin Jeslin in சமூகம்

கல்கிசையில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கிசை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

திஸ்ஸ மாவத்தை, பமுனுகம பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்ட பெண் கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.