போதைப் பொருள் வர்த்தகருக்கு மரண தண்டனை

Report Print Kamel Kamel in சமூகம்

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

போதைப் பொருளை வைத்திருந்து அதனை விற்பனை செய்த குற்றத்திற்காக மஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான நபர் ஒருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றினால் இந்த மரண தண்டனை தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

10 கிராமும் 28 மில்லி கிராமும் எடையிலான ஹேரோயின் போதைப் பொருளை குறித்த நபர் வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் திகதி குறித்த நபரை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

இலங்கையில் மரண தண்டனை அமுலாக்கம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.