வவுனியா அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில் பாரிய தீப்பரவல்

Report Print Theesan in சமூகம்

விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான வவுனியா அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில் இன்று பிற்பகல் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதிக்கு அருகாமையில் இருக்கும் குறித்த விதை உற்பத்திப் பண்ணை வளாகத்தில் இருக்கும் வயல் நிலங்களில் திடீரென ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வயல் நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இத் தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட புகையினால் ஏ9 வீதியில் சிறிதுநேரம் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது.

சிறுபோக அறுவடையின் பின்னரான காலப்பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டதனால் பாரிய அழிவுகள் தவிர்க்கபபட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா தீயணைப்பு பிரிவினர் ஒரு மணிநேர முயற்சியின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.