ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள்

Report Print Steephen Steephen in சமூகம்

பாடசாலை மாணவிகள் இருவர், கொத்மலை ஓயா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆக்ரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது.

கொத்மலை ஓயா ஆற்றுக்கு டொரின்டன் தேயிலை தோட்டத்தில் இருந்து தண்ணீர் செல்லும் ஓடையில் எறி வீட்டுக்கு செல்ல முயற்சித்த போது, ஒரு மாணவனும் இரண்டு மாணவிகளும் வேகமாக வந்த தண்ணீரில் சிக்கியுள்ளனர். இவர்களில் மாணவன் உயிர் தப்பியுள்ளார்.

மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். கொத்மலை ஓயா தற்போது பெருக்கெடுத்துள்ளதுடன் கொத்மலை நீர்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

12 வயதான மாணவிகளே இவ்வாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆக்ரபத்தனை பொலிஸார் கூறியுள்ளனர்.


you may like this video