களனி கங்கையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

மத்திய, சபரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 150 மில்லி மீற்றர் மழையும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கவனமாக இருக்குமாறும் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. லக்சபான நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கெனியன் நீர்தேக்கத்தில் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நீரேந்தும் பிரதேசங்களில் வசித்து வரும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பாக களனி மற்றும் களு கங்கைகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸாரும், முப்படையினரும் தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமான தகவல்களை வழங்க 117 தொலைபேசி எண் 24 மணி நேரமும் இயங்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.