வவுனியாவில் மாடு வெட்டும் இடத்தினை மாற்றுமாறு கோரிக்கை

Report Print Theesan in சமூகம்

மாடு அறுக்கும் தொழுவத்தினை இடமாற்றி மக்களுக்கு அசெளகரியம் ஏற்படாது பார்க்க வேண்டும் என வவுனியா நகரசபையின் உறுப்பினர் ஏ. ஆர். எம். லரீப் தெரிவித்தார்.

இன்று வவுனியா நகர சபையின் 16 ஆவது மாதாந்த சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது நகர சபை உறுப்பினர் ARM.லரீப் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் நீருக்கான போராட்டம் இடம்பெறலாம் என்பதனை கருத்தில் கொண்டு நகர சபைக்குட்பட்ட குளங்களை ஆழப்படுத்தி அழகுபடுத்தி அதன் ஊடாக நீரினை சேமிக்க வேண்டும்.

பிரதான வீதியில் நவீன தரத்திலான தெருவிளக்கு புனரமைக்கும் திட்டங்கள் தேவை, வர்த்தக நிலையங்கள் பெயர் மாற்றம் விடயமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இதன்போது தெரிவித்திருந்தார்.

அத்துடன் நீண்ட கால பிரச்சினையான அங்காடி வியாபாரிகளுக்கான நிரந்தரமான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட வேண்டும்.

மாடு அறுக்கும் தொழுவத்தினை இடமாற்றி பொருத்தமான மக்களுக்கு அசெளகரியம் ஏற்படாத ஒரு இடத்தினை தெரிவு செய்ய வேண்டும்.

பல்துறை விளையாட்டுக்களுக்காக பயன்படுத்தப்படும் நகர சபை மைதானத்தினை புனர்நிர்மானம் செய்யுமாறும் மைதானத்தை சுற்றியுள்ள கழிவுநீர் கான்கள் தூய்மைப்படுத்துமாறும் மைதானத்தினை வாடகைக்கு பெறுபவர்களுக்கு அதனுடைய ஒழுங்கு விதிமுறைகளை பேணுமாறும் வேண்டிக் கொள்கின்றேன் என தெரிவித்திருந்தார்.