தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவன்கார்ட் நிறுவன கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் சமன் திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தம்மை கைது செய்ய வேண்டாம் என இடைக்கால தடை உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க நீதிமன்றில் முன் பிணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
எனினும், இந்த முன் பிணை மனுவை நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது.