மீனவர்களின் பூர்வீக சொத்து கடற்படை கட்டுப்பாட்டிலையே இருக்கும் என அறிவிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

மீனவர்களின் களப்பு பிரதான வீதி கையளிக்க முடியாது என கோத்தபாய கடற்படை முகாமுடன் தொடர்புடைய உயர் அதிகாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

சிவில் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் கடற்படை தளபதிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் மாவட்ட செயலகத்தில் இன்று சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்படை உயர் அதிகரி ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

வட்டுவாகல் மீனவர்கள் பூர்வீகமாக பயன்படுத்திய வீதி ஒன்றை 10 வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் தமது தேவைக்காக பயன்படுத்தி வருவதோடு மீனவர்கள் செல்லத்தடை விதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியை மீனவர்களின் பாவனைக்காக திறக்கப்பட்டு மனிதஉரிமைகள் மீறப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் மீனவர்களினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் கடற்படை பிரதான முகாம் வீதியை மீனவர்களிடம் கையளிக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை என கோத்தபாய கடற்படை முகாம் உயர் அதிகாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.