குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Report Print Rusath in சமூகம்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 50 இலட்சம் ரூபா செலவில் குடி நீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியையடுத்து, தற்போது மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 50 இலட்சம் ரூபா செலவில் குடிநீர் கிணறுகள் அமைத்து கொடுக்கவும், குடிநீர் தாங்கிகள் கொள்வனவு செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுப்பட்டு வருகின்றன.

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு குடிநீர் பவுசர்கள் மற்றும் ரக்டர்கள் மூலம் பிரதேச சபைகள் நகரசபைகள் பிரதேச செயலகங்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ சபைகளின் ஊடாகவும் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாகவும் இதனால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.

இப் பிரச்சினையை முற்றாக நிரந்தரமாக தீர்க்க எதிர்காலத்தில் கித்துள் உறுகாமம், குளங்களை இணைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், மக்களின் இக்குடிநீர் பிரச்சினையை தீர்க்க அனைவரும் ஒற்றுமையுடன் செயற்ப்பட முன்வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.