முற்றுமுழுதாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள மலையகம்! பொது மக்கள் மிகுந்த அவதானம்

Report Print Kanmani in சமூகம்

கொட்டகலை - லொக்கீல் பகுதியில் உள்ள 30 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் அப்பகுதியில் உள்ள சிலர் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இந்த அசாதாரண சூழல் நிலவுமென வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மலையகத்தில் நிலவும் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று மதியம் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிட்டதக்கது.

Latest Offers