இலங்கையில் எச்.ஐ.வி தொற்று நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது

Report Print Kumar in சமூகம்

தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி மற்றும் மேகநோய் தொற்றுவது இலங்கையில் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் தொற்று மற்றும் எச்.ஐ.வி தடுப்பு நிலையத்தின் விசேட வைத்தியநிபுணர் டாக்டர் சத்தியா ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்றை தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் எயிட்ஸ் தாக்கம் தொடர்பில் விரிவாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகும் ஒருவர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வைத்தியதுறையில் அதற்கான நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

குறித்த செயலமர்வில் தேசிய பாலியல் தொற்று மற்றும் எச்.ஐ.வி தடுப்பு நிலையத்தின் விசேட வைத்தியநிபுணர் டாக்டர் சத்தியா ஹேரத், பாலியல்-எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட பொறுப்பதிகாரி டாக்டர் அனுசியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.