உலக நாடுகளை விட இலங்கையிலேயே இலவச கல்வி நடவடிக்கை: கிழக்கு மாகாண ஆளுநர்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

உலகத்தில் மற்ற நாடுகளை விடவும் இலங்கை நாட்டில் இலவசமாக கல்வி வழங்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்ட வடக்கு கல்வி வலயத்தில் புதியதொரு பாடசாலையை இன்று திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களின் ஆற்றல்கள், அபிவிருத்திகள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் குறித்தும் கவனம் எடுக்க வேண்டும்,இல்லாவிட்டால் ஒரே குவியலில் காணப்படும் மாம்பழத்தில் ஒரு மாம்பழம் பழுதாகிவிட்டால் அனைத்து மாம்பழங்களும் பழுதடையும் சாத்தியக்கூறு ஏற்படும்.

ஆகவே ஆசிரியர்கள் மாணவர்கள் விடயத்தில் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

ஆசிரியர்கள் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கல்வியை புகட்டினாள் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தேவையில்லை. கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் நீங்கள் எப்போதும் கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புறத்தில் கிடைக்கின்ற அனைத்து வசதிகளையும் கிராமப்புற பாடசாலைகளுக்கு வழங்கி வைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், கல்வி கற்பதற்கு அனைவருக்கும் ஒரே விதமான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் ஆளுநர் இதன்போது வாக்குறுதியளித்துள்ளார்.