கரையோர ரயில் சேவைகள் தொடர்பான அறிவித்தல்

Report Print Sindhu Madavy in சமூகம்

சீரற்ற காலநிலை காரணமாக கரையோர ரயில் சேவைகள் சற்று தாமதாக செயற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

மேலும் இன்றைய தினம் நாட்டில் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவியுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கரையோரப் பிரதேசங்களில் கடும் காற்று வீசுவதோடு ஆங்காங்கே மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டின் கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் சற்று தாமதமாக பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.