பெருந்தோட்ட காணிகள் அனைத்தும் குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது:வடிவேல் சுரேஸ்

Report Print Gokulan Gokulan in சமூகம்

பெருந்தோட்டங்களின் காணிகள் அனைத்தும் 22 கம்பனிகளுக்கு வழங்கபட்டிருந்தாலும் அவை குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் புவிசரிதவியல் அறிக்கையின் படி 65 வீதமான இடங்கள் மண்சரிவு அபாயத்திற்கு முகம் கொடுத்தள்ளது என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் பாதுகாப்பான இடங்களை தெரிவு செய்து பாடசாலைகளையும், வீடுகளையும் அமைப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்வதற்கும், உரிய காணிகளை பெற்றுக் கொடுப்பதற்குமான கலந்துரையாடல் இன்று பதுளை மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமானது. தோட்ட காணிகள் தோட்ட மக்களின் பொதுதேவைகளுக்கு தேவைப்படும் போது தோட்ட நிர்வாகங்கள் அதனை கொடுக்க வேண்டும்.

சில அதிகாரிகள் அவ்வாறு செயற்படாததினால் அரசாங்கத்தினால் பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களில் பல பாரிய பின்னடைவை நோக்கி செல்கின்றது. இதனால் பாதிப்படைவது பெருந்தோட்ட மக்களே.

தற்போது மண்சரிவு அபாயம் காரணமான பாதிப்புக்கு உள்ளான பாடசாலைகளை பிரிதொரு இடத்தில் அமைக்க காணிகள் வழங்கப்பட வேண்டும்.

இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்து உள்ளது. அதேபோல் மண்சரிவு அபாயம் உள்ள தோட்ட குடியிருப்புகளை பாதுகாப்பான இடங்களில் அமைப்பதற்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும்.

இதற்கு பொருத்தமான காணிகளை பெற்றுக் கொடுக்க தோட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சில வீட்டுத்திட்டங்கள் அமைச்சுகளினாலும் சில வீட்டுத்திட்டங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினாலும் இந்தியாவின் வீட்டு திட்டங்களினாலும் மேற் கொள்ளபட்டுள்ளன. அதேபோல் தோட்டங்களின் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தற்போது தோட்டங்களில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் முன்னெடுக்கபட்டு வரும் வீடமைப்பு திட்டங்கள் உரிய முறையில் நடைபெறுவதற்கு அனைத்து அரச அதிகாரிகளும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்.

மண்சரிவு அபாயத்தினால் இலங்கையில் பாதிக்கபட்ட மாவட்டத்தில் எமது மாவட்டத்தின் பாதிப்புக்களை வார்த்தைகளால் கூற முடியாது. ஆகவே அனைவரும் ஒன்றினைந்து அனர்த்தம் என்பதை மனதில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers