கண்டாவளை வெல்ல உற்பத்தி நிலையத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

Report Print Yathu in சமூகம்

கண்டாவளை வெல்ல உற்பத்தி நிலையத்திற்கு வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கண்டாவளை வெல்ல உற்பத்தி நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் குழுவினர் இன்றைய தினம் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

குறித்த பகுதி மக்களினுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகத்தினரின் தொடர்ச்சியான வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன், அமைச்சருடைய உயர்மட்ட அதிகாரிகள், பனை அபிவிருத்தி சபையினர், சங்கத்தினுடைய தலைவர், முகாமையாளர் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.