விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த சாரதி பொலிஸில் சரண்

Report Print Thirumal Thirumal in சமூகம்

மத்திய மாகாணம் - திம்புள்ள பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயங்களுக்குள்ளான நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

கெப் ரக வாகன சாரதி குறித்த முச்சக்கரவண்டியை மோதி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாகவும், பின்னர் கெப் ரக வாகன சாரதியை பிரதேசவாசிகள் துரத்திப் பிடிக்க முற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். பின்னர் அவரின் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பொலிஸார் சாரதியை திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளனர்.

இவரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers