வவுனியாவில் அரசியல் கருத்தாடல் நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்குப்படுத்தலின் கீழ் அரசியல் கருத்தாடல் நிகழ்வொன்று வவுனியாவில் நடைபெற்று வருகின்றது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகப் பகுதிகளில் அரசியல் ரீதியில் பொது மக்கள் படும் அவலநிலைகளை சுமந்த கருத்தாடல் நிகழ்வு இன்று வவுனியா தனியார் விடுதியொன்றில் நடைபெற்று வருகின்றது.

இக் கருத்தாடல் நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் த.வசந்தராஜா, தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் லி.நவநீதன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆகியோரின் சிறப்பு அரசியல் சமூக விழிப்புணர்வுகள் தாங்கிய கருத்தாடல் நடைபெற்று வருகின்றன.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரனேசன், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், லிங்கநாதன், தியாகராசா, ஈரோஸ் அமைப்பின் தலைவர் துஸ்யந்தன் ஆகியோர் உட்பட அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களும் குறித்த கருத்தாடலில் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers