மீன் பிடிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் மீன் பிடிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் பகுதியில் பாழடைந்த காணிக்குள் வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் அங்கு விரைந்த சம்பூர் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

61 டெட்டனேட்டர்கள் மற்றும் டைனமைட் கூறுகளே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Latest Offers