ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை மீளாய்வு செய்ய வேண்டும்

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட நபர்களை பிணையில் விடுதலை செய்வதை மீளாய்வு செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள், சட்டத்திற்கு முன் கொண்டு வரப்படும் போது, அவர்கள் எந்த வகையிலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து நாட்டு மக்களுக்கு கட்டாயம் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் காவிந்த ஜெயவர்தன கூறியுள்ளார்.

அதேவேளை ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடிக்கும் எந்த தேவையும் அரசாங்கத்திற்கு இருப்பதாக தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்று மூன்று மாதம் நிறைவு பெறுவதை முன்னிட்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Latest Offers