யாழில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் சிறீதரன் எம்.பியால் திறந்து வைப்பு

Report Print Yathu in சமூகம்

யாழ்ப்பாணம், விடத்தல் பளையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் திறந்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு, சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் தலைமையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ரூபாய் 5 மில்லியன் செலவில் மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் நிதி உதவியுடன் இக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த நிலையத்தினால் வழங்க உள்ள சேவைகள் தொடர்பாகவும் அறிந்து கொண்டுள்ளார்.

இங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், அதிகாரிகளுடைய சிறந்த அர்ப்பணிப்பின் மூலம் சிறந்த சேவையை வடமாகாணத்தில் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், சாவகச்சேரி உதவி திட்டமிடல் பணிப்பாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.