தபால் ஊழியர்களினால் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

Report Print Theesan in சமூகம்

தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக வவுனியா பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் இன்று மூடப்பட்டுள்ளது.

இந் நிலையில் பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை

தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தபால் ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, கிரான் உட்பட்ட பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இதன் காரணமாக தங்களது தபால் நிலையம் மூலமாக மேற்கொள்ளும் பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மன்னார்

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்றைய தினம் காலை முதல் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு 2013 ஆண்டுக்கு பின்னர் உரிய முறையில் வழங்கப்படவில்லை எனவும் குறித்த விடயத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இடம் பெற்று வருகின்றதுகுறித்த பணிபஸ்கரிப்பு காரணமாக மன்னார் பிரதான அஞ்சல் அலுவலகம் உட்பட அனைத்து உப அஞ்சல் அலுவலகத்தின் பிரதான பணிகள் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் தங்கள் தேவைக்காக தபாலகம் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

எனினும் மன்னார் பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் உப அலுவலகங்களில் உள்ளக பணிகள் மற்றும் அவசர சேவைகள் பரிசாட்திகளுக்கான அணுமதி அட்டைகள் முதியோர் ஓய்வுதிய பணம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.