கோத்தபாயவை களமிறக்குவதாக நான் ஒரு போதும் கூறவில்லை: மஹிந்த

Report Print Kamel Kamel in சமூகம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை களமிறக்குவதாக தாம் ஒரு போதும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்துள்ளதாகவும், இந்த தாக்குதல் சம்பவம் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒருவர் கூறும் போது மற்றுமொருவர் ஆபத்து இருப்பதாக கூறுகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்படவில்லை என சரத் பொன்சேகா தெளிவாக கூறி வருகின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.