கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையானார் சுமந்திரன்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் நிலவி வருகின்ற அசம்பாவிதங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிய பௌத்த விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கட்டுமானப்பணிகளை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அத்துமீறி பெளத்த விகாரை அமைப்பது தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றில் எம்.ஏ.சுமந்திரன் இந்துக்குருமார்களின் ஆசியுடன் இன்று முன்னிலையாகியுள்ளார்.