இலங்கையில் இதுவரையில் சிக்கியுள்ள 4000 இற்கும் மேற்பட்ட சாரதிகள்

Report Print Sujitha Sri in சமூகம்

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 237 வாகன சாரதிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை ஆறு மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.

இதேவேளை கடந்த ஐந்தாம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சுமார் 4624 சாரதிகள் மது போதனையில் வாகனம் செலுத்தியபோது அகப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.