நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவன் கடலில் மாயம்

Report Print Malar in சமூகம்

களுத்துறை - ஷான்த்த, செபஸ்தியன் வீதி கடற்பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவன் நேற்று மாலை நண்பர்கள் நால்வருடன் நீராடச் சென்றுள்ளார்.

இதன்போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

காணாமல் போன பாடசாலை மாணவன் களுத்துறை - கடுகுறுந்த பிரதேசத்தினை சேர்ந்த 15 வயதுடையவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவனை தேடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.