பூஜித், ஹேமசிறிக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

Report Print Kamel Kamel in சமூகம்

கட்டாய விடுமுறையளிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இந்த இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்காடுமை, மனித படுகொலைகளுக்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2ம் திகதி கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் அண்மையில் பிணையில் விடுதலை செய்பய்பட்டனர்.

இந்த இருவரும் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவர்களுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.