குருணாகல் நீதவான் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் முறைப்பாடு

Report Print Kamel Kamel in சமூகம்

குருணாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சஹாப்டீன் சாபீ தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது நீதவானின் செயற்பாடுகள் குறித்து குற்ற விசாரணைப் பிரிவினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, நீதவானின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்யுமாறு குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சாபீயின் மனைவி மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகிய தரப்புக்களும் ஏற்கனவே நீதவானுக்கு எதிராக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.