கந்தப்பளை ஆலய முன்றலில் புத்த விகாரை அமைக்க இடமளிக்கப்பட மாட்டாது

Report Print Gokulan Gokulan in சமூகம்

கந்தப்பளை - கோர்ட் லோஜ் முனுசாமி ஆலய முன்றலில் புத்த விகாரை அமைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் இது தொடர்பில் எழுத்து மூலம் கோரிக்கையொன்றை சமர்ப்பித்திருந்த நிலையில் இதனை அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் வழிமொழிந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கந்தப்பளை பொலிஸார், இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது என உறுதி அளித்துள்ளனர்.

அத்துடன், இத்தகைய விகாரை அமைப்பது தொடர்பாக தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என நுவரெலியா பிரதேச செயலாளர் அறிவித்திருந்தார்.

இத்தகைய நடவடிக்கைகளின் போது உரிய தீர்வை எட்ட பிரதேச செயலாளருக்கே அதிகாரம் இருப்பதாகவும், வேறு எந்தவொரு மத நிறுவன அமைப்புக்கும் அனுமதி இல்லை என்றும் மாவட்ட செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.