தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பகுதியில் சத்தியாக்கிரகம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கூட்டமைப்பினர் பேய்க்கும், பிசாசுக்கும் வித்தியாசம் தெரியாமல் திணறுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பகுதியில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை, பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் சந்தர்ப்பங்களை தவற விட்டுவிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கன்னியா விவகாரத்தை ஜனாதிபதியிடம் கதைக்க அமைச்சர் மனோ கணேசன் கட்சி பேதமின்றி எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் இவ்விடயம் குறித்து கதைக்க வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்து எந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளவில்லை. நான் மாத்திரமே கலந்து கொண்டிருந்தேன்.

ஆனால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்ட போது அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜனாமாச் செய்து தங்களது இனத்தின் நலனுக்காக ஒற்றுமையாகினார்கள். அவர்கள் தமது சமூக நலனுக்காக ஏதுவெல்லாம் செய்கின்றனர்.

ஆனால் எமது கூட்டமைப்பினர் பேய்க்கும் பிசாசுக்கும் வித்தியாசம் தெரியாமல் திணறுகின்றனர். பேய் வரக்கூடாது என்பதற்காக பிசாசை பாதுகாக்கின்றனராம்.

உலக வரலாற்றில் இவ்விடயம் தொடர்பாக கதைப்பவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.

மட்டக்களப்பில் கூட ஒரு விலேஜ் விஞ்ஞானி இருக்கின்றார். இது தவிர கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தை தலையில் தூக்கி வைத்துள்ளனர்.

இதனால் தற்போது தீர்வு கிடைக்க போவதில்லை என புலம்புகின்றனர். அடுத்த தேர்தலுக்கு தற்போது தயாராகின்றனர். என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Latest Offers