வீட்டுக் கிணறு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - புளியங்குளத்தில் வீட்டுக்கிணறு ஒன்றில் இருந்து இராணுவத்தினரால் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம், பெரியமடு விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஆயுதங்களை மீட்கும் செயற்பாட்டை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 81எம்.எம்.குண்டுகள் 11, ரி.56 துப்பாக்கி, மிதி வெடி உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயப்பகுதி (வருவாய்த்துறை) செயற்பட்டு வந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.