பெருந்திரளான தாய்மாரின் கண்ணீரில் நனைந்தது வவுனியா மண்

Report Print Theesan in சமூகம்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான போராட்டம் 884ஆவது நாளாக இன்றைய தினமும் தொடர்கின்றது.

இந்த நிலையில் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி, அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரி இன்று கண்ணீர்ப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கண்ணீர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்யுமாறும், அமெரிக்காவே சிங்கள மற்றம் பௌத்த ஒடுக்கு முறை ஜனநாயகத்திலிருந்து தமிழர்களை விடுவிக்க உன் உதவி தேவை என்றும் வலியுறுத்தி கதறியழுதுள்ளனர்.

இந்த போராட்டத்தில் பெருந்திரளான தாய்மார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.