மணல் அகழ்வு தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்விற்கு 14 நாட்களிற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பூநகரி பொலிஸ் நிலையம் முன்பாக நேற்று ஒன்று கூடிய பிரதேசமக்கள் மணல் அகழ்வை தடுக்குமாறு கோரியிருந்தனர்.

இதுதொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் வழக்கை ஏற்ற நீதிமன்றம் 14 நாட்களிற்கு மணல் அகழ்வில் ஈடுபட இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.