வெளியானது அவசர கால சட்டம் தொடர்பான அதி விசேட வர்த்தமானி

Report Print Malar in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, அவசர கால சட்டம் அமுல்படுத்த நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் அவசர கால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 02ஆம் சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய அதன் கட்டளை சட்டத்தின் இரண்டாம் பகுதியின் விதிகள் நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்த வேண்டும் என அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் அவசர கால சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.