இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் ஜோசப் ஸ்ராலினுக்கும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வடமாகாணத்தில் ஆசிரியர்களின் இடமாற்றங்களின் போது ஏற்படும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் தொடர்பிலும் அதிபர் சேவைத் தரம் III இல் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராயும் பொருட்டு கல்வியமைச்சின் செயலாளரின் தலைமையில் மாகாணப் பணிப்பாளர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவொன்றினை நியமிக்கவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் நிலவும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் சுமூகமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.