2019ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இணையத்தள வசதி

Report Print Malar in சமூகம்

2019ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகள் இணையத்தளத்தினூடாக தமது அனுமதிப்பத்திரங்களை நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அனுமதி அட்டைகள் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்ததையடுத்து பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும்

https://doenets.lk/ என்ற இணையத்தளத்தினூடாக பிரவேசித்து பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவு செய்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.