ஜுலை 23இல்... வருடங்கள் கடந்தும் ஆறாத தமிழர்களின் மனக் காயங்கள்

Report Print Sujitha Sri in சமூகம்

தமிழ் மக்களின் வாழ்வில் என்றைக்குமே மறக்க முடியாத பல காயங்கள் உள்ளன.

1983ஆம் ஆண்டு ஜுலை மாதத்தின் இறுதி வாரத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அந்த இன அழிப்பு வன்முறை தான் அதனை தொடர்ந்து பல தசாப்தங்களாக மிக மோசமான வன்முறைகள் இலங்கை தீவில் இடம்பெற காரணமாக அமைந்தது என்பது சந்தேகமில்லை.

இற்றை வரைக்கும் இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழ் இன அழிப்பை கூட 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற அந்த இன அழிப்பு தான் ஆரம்பித்து வைத்தது என கூறினால் மிகையாகாது.

ஆனால் நாம் கறுப்பு ஜுலையின் வழமையான பக்கங்களை பார்ப்பதை கடந்து இது தொடர்பில் தமிழர்களாகிய நாம் கவனிக்க தவறிய ஒரு சில விடயங்களை நாம் இந்த காணொளியில் பார்க்கவுள்ளோம்.