யூரோ நாணயத்தை மாற்றச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Vethu Vethu in சமூகம்

காலியில் போலி வெளிநாட்டு நாணயத்தாளை மாற்றச் சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான 200 யூரோ நோட்டு ஒன்றை மாற்ற சென்ற இருவரை அரச வங்கி அதிகாரிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் இருவரில் ஒருவர் இமதுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இளைஞன் ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

குறித்த இளைஞர்கள் யூரோ நாணயத்தாள் ஒன்றை மாற்ற சென்றுள்ள நிலையில் அவர்கள் 38000 ரூபா பணம் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் சிக்கில் எதுவும் ஏற்படவில்லை என்பதனால் மீண்டும் குறித்த இளைஞர்கள் வெளிநாட்டு நாணயங்கள் சிலவற்றை மாற்ற காலி நகரத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் போது போலி யூரோ என வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை பொலிஸாரிடம் அறிவித்தமையினால் பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் இருவரில் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு செல்ல தயாராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers